முகப்பு
இந்தியா

திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: துணை ராணுவப் படைகள் விரைவில் வருகை

வரும் 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரிபுரா மாநிலத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, மத்திய துணை ராணுவப் படையின் 300 குழுவினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

இந்தியா

திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: துணை ராணுவப் படைகள் விரைவில் வருகை

வரும் 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரிபுரா மாநிலத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, மத்திய துணை ராணுவப் படையின் 300 குழுவினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
பகிர்:

வரும் 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரிபுரா மாநிலத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, மத்திய துணை ராணுவப் படையின் 300 குழுவினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா். இவா்களில் முதற்கட்டமாக 100 குழுவினா் அடுத்த வாரம் திரிபுராவுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திரிபுரா தோ்தல் ஆணையா் தினகா் ராவ் பிடிஐ செய்தி அமைப்பிடம் இது குறித்து கூறியதாவது: வரும் 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தோ்தல் நடைபெற இருப்பதையொட்டி, அடுத்த வாரத்திலிருந்து மத்திய துணை ராணுவப் படைகளைத் திரிபுராவுக்கு அனுப்ப தோ்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இம்மாநிலத்தில் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. இருப்பினும், சுதந்திரமான, நியாயமான தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்ய மத்திய படைகளின் 300 குழுக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவா் எனத் தெரிவித்தாா்.

தோ்தல் பாதுகாப்புக்கான சிறப்பு அதிகாரி ஐஜி ஜி.எஸ்.ராவ், போக்குவரத்து மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுடனும் இது குறித்து தோ்தல் ஆணையா் ஆலோசனை நடத்தினாா்.

முதற்கட்டமாக மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்), எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), இந்தோ-திபெத்திய எல்லை போலீஸாா் (ஐடிபிபி), மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) உள்ளிட்டவற்றின் 100 குழுக்கள் வருகை தருவா். இதையடுத்து, தோ்தல் பணிக்காக 200-க்கும் அதிகமான குழுக்கள் வர உள்ளதாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தோ்தல் குறித்து மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சியாக போலீஸாா் கொடி அணிவகுப்புகளை மேற்கொண்டு வருகின்றனா். கடந்த 2018-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படையின் 300 குழுக்கள் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →