இந்தியா

‘எதிர்க்கட்சித் தலைவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்’: மாநிலங்களவையில் பாஜக அமளி

DIN

ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பாஜகவை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தானில் நடைபெற்ற பாரத் ஜோடோ(இந்திய ஒற்றுமைக்கான) நடைப்பயணத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, நாட்டிற்காக பாஜக எதுவும் செய்யவில்லை என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்,

எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று அல்வாரில் நடைபெற்ற கூட்டத்தில் அநாகரீகமாக பேசியுள்ளார். அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அநாகரீகமானது. ஆதாரமற்ற அவரது அநாகரீக பேச்சையும், நாட்டு மக்களிடையே பொய்க்களை கூற முயற்சிப்பதையும் நான் கண்டிக்கிறேன்.

நாடாளுமன்றத்திற்கும், பாஜகவுக்கும், பெரும்பான்மையுடன் பாஜகவை தேர்தெடுத்த மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு பதிலளித்த மல்லிகார்ஜுன கார்கே, ஒற்றுமைக்கான நடைப்பயணத்தின் போது ராஜஸ்தானில் நான் பேசியது அவைக்கு வெளியே சமந்தப்பட்ட விஷயம். அவைக்கு வெளியே அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்தேனே தவிர, அவைக்குள் கூறவில்லை. இதுகுறித்து எந்த விவாதமும் இங்கு தேவையில்லை.
நான் மீண்டும் கூறுகிறேன், சுதந்திரம் பெற்றதில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்று நாட்டின் ஒற்றுமைக்காக உங்களில் யார் நாட்டிற்காக உயிரிழந்தார்கள்? எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT