மணிப்பூரில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் ஆசிரியர் உள்பட 6 மாணவர்கள் பலியாகினர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் நோனி மாவட்டத்தில் இன்று பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் 6 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் பலியாகினர். பழைய கச்சார் சாலையில் பேருந்து திடீரென திருப்ப முயன்றபோது விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்னர் இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் மேலும் 20 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: டிச. 12ஆம் தேதி சபரிமலையில் குவிந்த 1.07 லட்சம் ஐயப்ப பக்தர்கள்
தம்பால்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் நோனி மாவட்டத்தில் உள்ள கூப்பும் பகுதிக்கு ஆய்வுச் சுற்றுலா சென்றதாகவும், மாணவிகள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.