முகப்பு
உ.பி. மதரஸாக்களில் வார விடுமுறை நாளை மாற்ற பரிந்துரை
இந்தியா

உ.பி. மதரஸாக்களில் வார விடுமுறை நாளை மாற்ற பரிந்துரை

மதரஸாக்களில் வார விடுமுறை நாளை வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமையாக மாற்றுவது தொடர்பாக வாரியம் அடுத்த மாதம் ஆலோசிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
உ.பி. மதரஸாக்களில் வார விடுமுறை நாளை மாற்ற பரிந்துரை
பகிர்:

லக்னௌ: மதரஸாக்களில் வார விடுமுறை நாளை வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமையாக மாற்றுவது தொடர்பாக உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியம் அடுத்த மாதம் ஆலோசிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாரியத்தின் தலைவர் லிஃப்திகார் அகமது ஜாவேத் வைத்திருக்கும் இந்த பரிந்துரைக்கு, மதரஸாக்களின் ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

எனினும், வரும் ஜனவரி மாதம் நடைபெறும் கூட்டத்தில் இந்த பரிந்துரை தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று ஜாவேத் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று தொழுகை நடத்த சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியதிருக்கும். அதனால்தான் மதரஸாக்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஒரு வேளை வார விடுமுறை மாற்றப்பட்டால், தவறான தகவலை அது வெளிப்படுத்துவதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மதரஸாக்களில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில்தான் விடுமுறை விடப்படும். இஸ்லாம் மதத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவது என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முழு கட்டுரையைப் படிக்க →