இந்தியா

திரும்பப் பெறப்பட்டது அஃதாப்பின் ஜாமீன் மனு

PTI

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்துவாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஃப்தாப் பூனாவாலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டது.

ஏற்கனவே அஃப்தாப் பூனாவாலா, தனது ஜாமீன் மனு தவறாக தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியிருந்தநிலையில், இன்று காணொலி காட்சி வாயிலாக அவர் அஃப்தாப் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தில்லி நீதிமன்றம் அறிவித்துவிட்டது.

இது குறித்து ஷ்ரத்தாவின் தந்தை சார்பாக ஆஜராகும் வழக்குரைஞர் சீமா குஷ்வாஹா கூறுகையில், இன்னும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் அதற்குள் அஃதாப் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், ஜாமீன் மனு தாக்கல் செய்ய தான் அனுமதி அளிக்கவில்லை என்று அஃப்தாப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று அவரது ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடந்த விசாரணையின்போது, தில்லி நீதிமன்றத்தில் தனது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கான அனுமதியை வழக்குரைஞருக்கு மறுத்துவிட்டதாகவும் அஃப்தாப் குறிப்பிட்டிருந்தார்.

தில்லி நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி பிருந்தாகுமாரி, வழக்கு விசாரணையின்போது, அஃப்தாப்பிடமிருந்து ஜாமீன் மனு தவறுதலாக தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.

பிறகு, குற்றவாளியிடம் காணொலி வாயிலாக பேச வேண்டும் என்று கூறியிருந்ததால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பிறகு, காணொலி வாயிலாக அஃப்தாப் பேசுகையில், தான் ஒரு வாக்காலத் நாமாவில் கையெழுத்திட்டுக் கொடுத்ததாகவும், ஆனால், அது ஜாமீன் மனு என்று தனக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில், ஜாமீன் மனுவை நிலுவையில் வைக்க வேண்டுமா என்று நீதிபதி கேட்டதற்கு, எனது வழக்குரைஞரிடம் பேசி, விரைவில் ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன் என்று பதிலளித்திருந்தார். இந்த நிலையில், இன்று ஜாமீன் மனு திரும்பப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT