இந்தியா

பஞ்சாபில் ஆளில்லா பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது எல்லை பாதுகாப்புப் படை!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானம் பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது

DIN


புது தில்லி/அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானம் பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது: 

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அமிர்தசரஸ் பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் விமானம் வருவதும் அதனை எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்துவதும் அடிக்கடி நடந்து வருகிறது. 

இந்நிலையில், பஞ்சாபின் டர்ன் தரன் மாவட்டத்தின் ஃபெரோஸ்பூர் செக்டரில் உள்ள ஹர்பஜன் எல்லைச் சாவடி அருகே பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் பறந்தது. உடனடியாக எல்லை பாதுகாப்புப் படையினர் அதனை "அதிகயளவில்" சுட்டனர். புதன்கிழமை இரவு 8 மணியளவில் சுட்டு வீழ்த்தினர்.

வியாழக்கிழமை காலை அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது, விவசாய நிலத்தில் கிடந்த ஆளில்லா விமானம் மீட்கப்பட்டது என்று கூறினார்.

மேலும், பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானத்தில் இருந்து ஏதேனும் வெடிபொருள்கள் கீழே விழுந்ததா என தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT