ஆதிர் ரஞ்சன் சௌத்ரி 
இந்தியா

கரோனா தீவிரம்: குஜராத்தில் பிரதமர் மோடி ஏன் பிரசாரம் செய்தார்? - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கேள்வி

கரோனா பரவல் கடந்த மாதமே தீவிரமடைந்த நிலையில் குஜராத்தில் ஏன் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார் என காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

கரோனா பரவல் கடந்த மாதமே தீவிரமடைந்த நிலையில் குஜராத்தில் ஏன் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார் என காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கேள்வி எழுப்பியுள்ளார். 

சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நேற்று முதல் மத்திய அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். மேலும், கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, 'இப்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணம் தில்லியில் நுழையப் போகிறது. இந்த நேரத்தில் கரோனா தொற்று பரவுவதாக பாஜக அரசு கூறுகிறது. உண்மையில் இந்த ஒமைக்ரான் திரிபு வகை வைரஸ்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்-நவம்பர் இடையே கண்டறியப்பட்டன.

இந்த தகவல் கிடைத்தபின்னரும் குஜராத் தேர்தலுக்காக பிரதமர் மோடி ஏன் பிரசாரம் செய்தார்? சமீபத்தில் நாடாளுமன்றத்தில் திணை உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது ஏன்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழை!

முல்லைப் பெரியாறில் இருந்து இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்ட உபரி நீர் நிறுத்தம்!

தெருநாய்கள் விவகாரம்: தமிழகம் உள்பட அனைத்து தலைமைச் செயலர்களும் ஆஜராக உத்தரவு!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சீனக் கடலில் விழுந்து அமெரிக்க போர் விமானம், ஹெலிகாப்டர் விபத்து!

SCROLL FOR NEXT