முகப்பு
இந்தியா

பிகாரில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்: 5 பேர் கைது

பிகாரில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
கோப்புப்படம்
பகிர்:

பிகாரில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பிகார் மாநிலம், போஜ்பூரின் சண்டி கிராமத்தில் உள்ளூர் பேட்மிண்டன் தொடரில் வெற்றி பெற்ற இளைஞர்கள் சிலர், கோப்பையை தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். அப்போது அந்த இளைஞர்கள் சிலர் ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என தேச விரோத கோஷங்களை எழுப்பினர். 

இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. மேலும இந்த விடியோ போலீசார் கவனத்திற்குச் சென்றதையடுத்து, வழக்குப்பதிந்து அர்ரா மாவட்டத்தில் 5 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை பிடிக்க விடியோவை அவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

இதனிடையே கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இந்த சம்பவம் பிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.