இந்தியா

ஜனவரியில் இந்திய அறிவியல் மாநாடு: பிரதமர் தொடக்கி வைக்கிறார்

2 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்பூரில் இந்திய அறிவியல் மாநாடு ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

2 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்பூரில் இந்திய அறிவியல் மாநாடு ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக கரோனா தொற்று காரணமாக இந்த மாநாடு நடைபெறவில்லை. 

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்திய அறிவியல் மாநாட்டிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 2023, ஜனவரி 3ஆம் தேதி நாக்பூரில் தொடங்கும் மாநாடு ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கிவைக்க உள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

பெண்களுக்கான  அதிகாரமளித்தலுடன் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எனும் கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த அறிவியல் மாநாடானது கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்தபோது கிடைத்த ரூ. 2 லட்சம்! பழைய ரூ. 2,000 தாள்கள்!

தீபாவளியையொட்டி பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை!

இந்தியா - பாக். உறவை இணைப்போம்: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் டிரம்ப்!

டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த மார்க்ரம்!

கரூர் கூட்ட நெரிசல் பலி!: CBI விசாரணைக்கு உத்தரவு | செய்திகள்: சில வரிகளில் | 13.10.25

SCROLL FOR NEXT