கோப்புப் படம். 
இந்தியா

பாராகிளைடிங் சாகசத்தின்போது விபத்து: குலுவில் 30 வயது இளைஞர் பலி

குலு மாவட்டத்தில் பாராகிளைடிங் பயணத்தின் போது தவறி விழுந்து 30 வயது இளைஞர் பலியானார். 

DIN

குலு மாவட்டத்தில் பாராகிளைடிங் பயணத்தின் போது தவறி விழுந்து 30 வயது இளைஞர் பலியானார். 

மகாராஷ்டிர மாநிலம், சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சூரஜ் ஷா(30). ஹிமாசல பிரதேச மாநிலம் சுற்றுலா சென்ற இவர் குலு மாவட்டத்தில் உள்ள தோபி பகுதியில் பாராகிளைடிங் சாகசத்தில் பங்கேற்றார். பாராகிளைடர் காற்றில் இருந்தபோது, ​​​​அவரது பாதுகாப்பு பெல்ட் கழன்றதில் சூரஜ் தரையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. 

உடனே சூரஜ் உள்பட இருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குலு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சூரஜ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பாராகிளைடிங் விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல் அதிகாரி குருதேவ் கூறுகையில், விபத்தில் ஒரு சுற்றுலா பயணி பலியானார்.

பலியானவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார்கள். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.  பாராகிளைடிங் விமானிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT