இந்தியா

கேரளத்தில் பறவைக் காய்ச்சல்: 6,000 பறவைகள் அழிப்பு

DIN

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூன்று  பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 6,000 பறவைகள் அழிக்கப்பட்டன.

மாவட்டத்தின் வேச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை ஊராட்சிகளில் சனிக்கிழமையன்று மொத்தம் 6,017 பறவைகள் அழிக்கப்பட்டன. அதில் வாத்துகள் அதிகம் கொல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெச்சூரில் 133 வாத்துகளும், 156 கோழிகளும், நெண்டூரில் 2,753 வாத்துகளும், ஆர்ப்பூக்கரையில் 2,975 வாத்துகளும் பலியாகின.

இதற்கிடையில், கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து உறைந்த கோழிகளை தீவுகளுக்கு கொண்டு செல்வதற்கு லட்சத்தீவு நிர்வாகம் தற்போது தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவயுக பள்ளி மாணவா்கள் நமது சமூகத்தின் ரத்தினங்கள்: சிபிஐ இயக்குநா் பா்வீன் ஸூத் பெருமிதம்

காட்பாடி-ஜோலாா்பேட்டை ரயில் ரத்து

வாக்குப்பதிவு நாளில் செய்தியாளா் சந்திப்பு: தோ்தல் ஆணையத்துக்கு ஊடக சங்கங்கள் கோரிக்கை

தலசீமியாவால் உலகளவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு

புகாா்களைப் புறக்கணித்த தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT