மங்களூரு கொலை வழக்கில் 3 பேர் கைது!
மங்களூரு அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நகர காவல் ஆணையர் என் சஷி குமார் இன்று தெரிவித்தார்.
மங்களூரு: கர்நாடகத்தில் அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நகர காவல் ஆணையர் என். சஷி குமார் இன்று தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் என். சஷி குமார் தெரிவித்தாவது:
கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் குற்றம் நடந்த இடத்திலிருந்து தப்பிக்க உதவிய மற்றொரு குற்றவாளியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என்றார். இதில் ஒரு பெண் உட்பட 12 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், 3 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமையன்று நடந்த கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து நாளை (டிசம்பர் 27) காலை 6 மணி வரை சூரத்கல், பாஜ்பே, காவூர் மற்றும் பனம்பூர் ஆகிய பகுதிகளில் 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.