இந்தியா

நாட்டில் புதிதாக 196 பேருக்கு கரோனா பாதிப்பு!

DIN



புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 196 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,428 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 196 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,63,968 ஆக உள்ளது. மேலும் கேரளத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,695 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,43,179 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,428 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வழக்கு இறப்பு விகிதம் 1 சதவீதமாக பதிவாகி உள்ளது.  

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 5 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 29,818 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட் 7, 2020 இல் 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 இல் 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 இல் 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 இல் 50 லட்சத்தையும் தாண்டியது.

செப்டம்பர் 28 இல் 60 லட்சத்தையும், அக்டோபர் 11 ஆம் தேதி 70 லட்சத்தையும் தாண்டி, அக்டோபர் 29 ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சத்தையும் தாண்டி, டிசம்பர் 19 ஆம் தேதி ஒரு கோடியைத் தாண்டியது.

கடந்த ஆண்டு மே 4 ஆம் தேதி இரண்டு கோடி மற்றும் ஜூன் 23 ஆம் தேதி மூன்று கோடி என்ற மோசமான மைல்கல்லை நாடு கடந்தது. இந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி நான்கு கோடியைத் தாண்டியது.

கடந்த 24 மணி நேரத்தில் 35,173 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT