முகப்பு
இந்தியா

முகேஷ் அம்பானியின் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம்

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந் அம்பானிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:13 AM
பகிர்:

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 

இந்திய அளவில் பிரபலமான தொழிலதிபராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். 

இந்நிலையில் அவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்டுக்கும் ராஜஸ்தானில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

ராதிகா மெர்சண்ட், மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தொழிலதிபர் வீரேன் மெர்சண்ட்டின் மகள் ஆவார். ராஜஸ்தானின் ஸ்ரீநாத்ஜி கோயிலில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் உயர்மட்ட குழு உறுப்பினராக உள்ளார். மேலும் அவர் ரிலையன்ஸ் தொழில் நிறுவனத்தின் ஆற்றல் வணிகத்தை கவனித்து வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க்கில் பட்டப்படிப்பு முடித்துள்ள ராதிகா மெர்சண்ட் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.  

முழு கட்டுரையைப் படிக்க →