முகப்பு
இந்தியா

பிரதமரின் தாயார் மறைவு: குஜராத் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குஜராத் செல்கிறார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:13 AM
முதல்வர் மு.க. ஸ்டாலின்
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குஜராத் செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(டிச.30) காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 100. 

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தாயார் மறைவையடுத்து ஆமதாபாத் வந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாயாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இன்னும் சற்று நேரத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. 

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் தெரிவிக்க முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் குஜராத் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இன்று குஜராத் செல்கிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →