இந்தியா

'ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது' - மோடி உருக்கம்

ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது என தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். 

DIN

ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது என தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று(டிச.30) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 100. 

ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் (டிச. 28) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். நேற்று குஜராத்தில் யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு சென்று பிரதமர் மோடி தனது தாயை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தாயாரின் மறைவு குறித்து பிரதமர் மோடி, 'ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது.. துறவியின் பயணமும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளமும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையும் அடங்கிய அந்த மூன்று சொரூபங்களை என் தாயிடம் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.

அவருடைய 100வது பிறந்தநாளில் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயம் சொன்னார், அது எப்போதும் நினைவுக்கு வரும், புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள் என்பதே அது' எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் உரையில் மக்கள் பெரிதாக எதிர்பார்த்தார்கள்; அப்படியொன்றும் புதிதாகப் பேசவில்லை! -காங்.

“மீனவர்கள் பிரச்னையில் விஜய் Update-ஆக இல்லை!” வானதி சீனிவாசன்

சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மின்டன்: சாம்பியன் பட்டத்தை நழுவவிட்ட இந்தியா!

Vijay-யின் பேச்சும்! எதிரொலியும்! | TVK | DMK | BJP

ரயில் நீா் பாட்டில்களின் விலை ரூ.1 குறைப்பு: நாளை முதல் அமல்

SCROLL FOR NEXT