முகப்பு
இந்தியா

'திட்டமிட்டபடி பணியைத் தொடருங்கள்' - மோடி குடும்பத்தினர் வேண்டுகோள்!

ஹீராபென் மோடி நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என பிரதமர் மோடியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:13 AM
பகிர்:

ஹீராபென் மோடி நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என பிரதமர் மோடியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(டிச.30) காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 100. 

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தாயார் மறைவையடுத்து ஆமதாபாத் வந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாயாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தாயின் உடலை சுமந்து வந்த மோடி, இறுதிச் சடங்கு செய்தார். 

இந்நிலையில், 'இந்த கடினமான காலங்களில் பிரதமர் மோடியின் தாயார் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. அனைவரும் அவரை தங்களது மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். திட்டமிடப்படி தங்களது பணிகளைத் தொடருங்கள். அதுவே ஹீராபென்னுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்' என்று பிரதமர் மோடி குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →