இந்தியா

2022-ல் காஷ்மீர் என்கவுன்டரில் 172 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

2022-ல் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூடுதல் காவல்துறை இயக்குனர் விஜய் குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "2022 ஆம் ஆண்டில், காஷ்மீரில் மொத்தம் 93 வெற்றிகரமான என்கவுன்டர்கள் நடந்தன, அதில் 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உட்பட 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் அல்லது என்கவுன்டர்களின் போது 14 ஜம்மு காஷ்மீர் போலீசார் உட்பட மொத்தம் 26 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேசமயம் பயங்கரவாதிகளால் மொத்தம் 29 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 

அதில் 3 பேர் காஷ்மீர் பண்டிட்கள். 2022 ஆம் ஆண்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பான 26 சிறு சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். காஷ்மீரில் கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 171 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

அதில் 19 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் 152 உள்ளூர் பயங்கரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT