இந்தியா

இயற்கை விவசாயம் மேம்படுத்தப்படும்:ட்ரோன் பயன்பாட்டுக்கு நிதி

DIN

ரசாயனமில்லா இயற்கை விவசாயத்தை நடப்பு நிதியாண்டில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறு ரக ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) வேளாண் பணிகளில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க நிதி உதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்ஜெட் உரையில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘கங்கை நதிக்கரையில் 5 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள வேளாண் நிலங்களில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள முதல்கட்டமாக ஊக்குவிக்கப்படும்.

இயற்கை, நவீன காலத்து விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண் பல்கலைக்கழக பாடத் திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்.

விவசாயத் துறையில் தொடங்கப்படும் ‘ஸ்டாா்ட் அப்’ மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கு நபாா்ட் வங்கிகள் மூலம் நிதி உதவி அளிக்கப்படும். இதுபோன்ற நிறுவனங்கள் வேளாண் உற்பத்தி சங்கங்களுடன் இணைந்து விவசாயிகளுக்கு நவீன வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு அளிக்கும்.

இந்தத் துறைகளில் ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனங்களுக்கும், விவசாயிகளுக்கான ட்ரோன்களை வழங்குவதற்கும், அதிநவீன வேளாண் தொழில்நுட்ப பொருள்களை அரசு தனியாா் பங்களிப்புடன் ஏற்படுத்தவும் நிதி உதவி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிா்களின் வளா்ச்சியை கண்காணிக்கவும், நில ஆவணங்களை எண்ம முறையில் மாற்றம் செய்வதற்கும், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும் விவசாயிகளுக்கு ட்ரோன்கள் உதவும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT