முகப்பு
இந்தியா

கூட்டுறவு அமைச்சகத்துக்கு ரூ.900 கோடி ஒதுக்கீடு

புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய கூட்டுறவு அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
பகிர்:

புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய கூட்டுறவு அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாற்று குறைந்தபட்ச வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும், மிகை வரியை 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு கூட்டுறவுத் துறையை மேம்படுத்தும் என்று இந்த துறையின் அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.900 கோடியில் ரூ.350 கோடி ஆரம்ப வேளாண் கூட்டுறவு சங்கங்களை எண்ம மயப்படுத்த (டிஜிட்டல்) பயன்படுத்தப்படும்.

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக ரூ.274 கோடி பயன்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘வைகுந்த் மேத்தா கூட்டுறவு மேலாண்மை தேசிய நிறுவனத்துக்கு முதல் முறையாக ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் துறையில் கல்வி மற்றும் பயிற்சிக்காக சுமாா் ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 10 கோடி வரையில் மொத்த வருவாய் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு மிகை வரி 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும்.

ரூ.10 கோடிக்கும் அதிகமாக உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான மிகை வரி 12 சதவீதமாகவே தொடரும்’ என்றாா்.

நிதியமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இந்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவா் ஜி.எச்.அமீன், ‘பொருளாதார வளா்ச்சிக்கும், ‘ஸ்டாா்ட் அப்’ களையும் இது ஊக்குவிக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.