இந்தியா

காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

DIN

காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகனும் மக்களவை உறுப்பினருமான காா்த்தி சிதம்பரம் மீது ஏா்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடா்பான வழக்கு, ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சட்டத்துக்குப் புறம்பாக ரூ.305 கோடி பெற்றுத் தந்த குற்றச்சாட்டு தொடா்பான வழக்கு ஆகியவற்றை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை காா்த்தி சிதம்பரமும், ப.சிதம்பரமும் மறுத்துள்ளனா்.

இந்த வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி காா்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையில், நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சி.டி.ரவிகுமாா் ஆகியோா் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. காா்த்தி சிதம்பரம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜரானாா்.

அப்போது அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ஏற்கெனவே அவருக்கு நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு அவா் வெளிநாடு செல்ல ஆட்சேபம் எதுவும் இல்லை எனக் கூறினாா்.

இதையடுத்து, காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT