இந்தியா

‘அரசுப் பணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது’: மல்லிகார்ஜுன கார்கே

DIN

அரசுப் பணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

“நாட்டில் வேலையின்மை பரவலாக அதிகரித்து வருகிறது. பெரும் தொழிற்சாலைகள் மூடி வருவதால் இளைஞர்கள் துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். முதலீடுகள் மற்றும் அரசுப் பணிகளும் குறைந்து வருகின்றது.

2014ஆம் ஆண்டில் பாஜக வாக்குறுதியில் ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தனர். அப்படியெனில், தற்போது 15 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால், எவ்வளவு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT