முகப்பு
இந்தியா

திரிணமூல் காங்கிரஸின் தலைவராக மம்தா மீண்டும் தேர்வு

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி மீண்டும் மம்தா பானர்ஜி புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
மம்தா பானர்ஜி
பகிர்:

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி மீண்டும் மம்தா பானர்ஜி புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மூன்றாவது முறையாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், கட்சித் தலைவரின் பதவிக் காலம் முடிவடையவுள்ளதை அடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு எதிராக யாரும் போட்டியிட விருப்பம் தெரிவிக்காததால் போட்டியின்றி மீண்டும் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும், கட்சியின் பொதுச் செயலாளருமான பார்தா சாட்டர்ஜி அறிவித்தார்.

கடந்த 1998ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் தொடங்கப்பட்டதிலிருந்து மம்தா பானர்ஜி தலைவராக நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →