இந்தியா

பாஜக உறுப்பினர்களுடன் இன்று காலை உரையாடுகிறார் மோடி

DIN

நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களுடன் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடவுள்ளார். 

மெய்நிகர் வாயிலாக உரையாடும் பிரதமர் மோடி மத்திய பட்ஜெட் குறித்து தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் எடுத்துரைக்கவுள்ளார். 

தில்லியில் பிரதமரின் உரையாடலில் பங்கேற்க பாஜக மக்களவை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பட்ஜெட்டில் உள்ள சாத்தியங்கள், வாய்ப்புகள், நலன்கள் குறித்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். 

சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பட்ஜெட்டானது அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டாக இருப்பதாகவும் பிரதமர் மோடி ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT