முகப்பு
இந்தியா

காஷ்மீர்: தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை.

Updated On : 2 பிப்ரவரி, 2022 at 12:42 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை.

ஜம்மு - காஷ்மீரின் ஷோபியன் மாவட்டம் நடிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால்  பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

பலியான தீவிரவாதியின் அடையாளம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.