முகப்பு
இந்தியா

பிகாரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

பிகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2022 at 3:14 PM
பகிர்:

பிகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

முங்கர் ரேஞ்ச் துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் கூறுகையில், 

சானன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லத்தியா காட்டில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சட்டவிரோத அமைப்பைச் சேர்ந்த சிலரும் காயமடைந்தனர். 

Advertisement

துப்பாக்கிச் சூட்டில் காவலர்களுக்கு உயிர்ச் சேதமோ அல்லது காயமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகின்றன. 

அண்மையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர் காவல்துறையின் அழுத்தத்தால் தந்தை-மகன் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.