மஹுவா மொய்த்ரா (கோப்புப்படம்) 
இந்தியா

கொஞ்சம் கோமியத்த குடிச்சுட்டு தயாரா இருங்க: பாஜகவுக்கு திரிணமூல் எம்பி சவால்

மக்களவையில் தான் உரையாற்ற இருப்பதால் 'இடையூறு செய்யும் குழுவை' பாஜக தயாராக வைத்துக் கொள்ளும்படி திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா சவால் விடுத்துள்ளார்.

DIN

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மேற்குவங்க எம்பி மஹுவா மொய்த்ரா திரிணமூல் சார்பில் இன்று உரையாற்றவுள்ளார். 

இதையொட்டி ட்வீட் செய்துள்ள அவர், மக்களவையில் தான் உரையாற்ற இருப்பதால் இடையூறு செய்யும் குழுவை பாஜக தயாராக வைத்திருக்கும்படி சவால் விடுத்துள்ளார். நேற்று, வேலையின்மை முதல் வெளியுறவுக் கொள்கை வரையிலான விவகாரங்களில் மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசிய நிலையில், இன்று மொய்த்ரா பேசவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், "குடியரசுத் தலைவரின் உரை குறித்து மக்களவையில் இன்று மாலை பேசவுள்ளேன். முன்கூட்டியே, பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர்களின் இடையூறு செய்யும் குழுவை தயாராக வைத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கற்பனை நிறைந்த விவரங்களை படித்து வைத்து கொள்ளுங்கள். கொஞ்சம் கோமியத்தை குடித்துவிடுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் கலாய்த்து போடப்படும் பதிவுகளுக்கு தக்க பதிலடி அளித்துவரும் மொய்த்ரா, இம்மாதிரியான பதிவுகளை பாஜக தகவல் தொழில்நுட்ப அணிதான் பதிவிடுகிறது என குற்றம்சாட்டிவருகிறார்.

ராகுல் காந்தியை தொடர்ந்து, பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சிக்கவுள்ளதை மேற்குவங்கம் கிருஷ்ணாநகர் தொகுதி எம்பியாக உள்ள மொய்தரா உறுதிப்படுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT