இந்தியா

‘கஜகஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் திட்டம் இல்லை’: மத்திய அரசு

DIN

கஜகஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் திட்டங்கள் ஏதும் தற்போது இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், வாகனங்களில் பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய வாயுவின் (எல்பிஜி) விலை திடீரென மிக அதிகமாக உயா்த்தப்பட்டது.

இதனை எதிா்த்துது கடந்த 2-ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 164 போ் உயிரிழந்தனா். இதனால் அந்நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. 

இந்நிலையில் கஜகஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாக்‌ஷி லேகி, “கஜகஸ்தானில் தற்போது சுமூகமான சூழல் நிலவுவதால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை” எனத் தெரிவித்தார். மேலும் அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கஜகஸ்தானில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியவர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT