மீரட்டில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
உ.பி.,யில் தேர்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி இன்று தில்லி திரும்பினார். இவருடைய கார் சாஜர்சி டோல் பிளாசா அருகே சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையும் படிக்க- பிப்ரவரி 10 முதல் தொடங்கும் ரஞ்சி கோப்பைப் போட்டி
இந்த சம்பவத்தில் ஒவைசியின் வாகனம் பஞ்சரானது. இதையடுத்து மாற்று வாகனத்தை வரவழைத்து அசாதுதீன் ஒவைசி அங்கிருந்து புறப்பட்டார். இந்த சம்பவம் மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள் சுமார் மூன்று முதல் நான்கு ரவுண்டுகள் சுட்டதாக ஒவைசி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.