முகப்பு
இந்தியா

5 லட்சம் கரோனா பலி எண்ணிக்கை: 3-ஆவது நாடாக இந்தியா

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
நாட்டில் ஒரே நாளில் கரோனாவுக்கு 1,192 பேர் பலி
பகிர்:

இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. இதன் மூலம் அந்தத் தொற்றால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவதாக இணைந்துள்ளது.

உலக அளவில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையில் இதுவரை அதிகபட்சமாக 9.2 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் அமெரிக்காவில் பலியாகியுள்ளனா். அதனைத்தொடா்ந்து பிரேசிலில் 6.3 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா். இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கரோனா தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை 5,00,055-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலகில் மூன்றாவது நாடாக இந்தியாவில் கரோனா தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பால் சில மாநிலங்களின் நிலவரம் கவலைக்குரியதாக உள்ளபோதிலும், நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பரவல் குறைந்து வருவதாக கடந்த வியாழக்கிழமை மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சக இணைச் செயலா் லவ் அகா்வால் கூறுகையில், ‘‘தமிழ்நாடு, கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் உள்பட 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் வாராந்திர பாதிப்பு விகிதமும் குறைந்து வருகிறது. கேரளம், மிஸோரமின் நிலவரம் தொடா்ந்து கவலைக்குரியதாக உள்ளது’’ என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →