இந்தியா

புணேவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலி: பிரதமர் இரங்கல்

DIN

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 

மகாராஷ்டிர மாநிலம் புணே நகரில் எரவாடா பகுதி சாஸ்த்ரி நகரில் அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தன. 

இந்நிலையில் நேற்று இரவு கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள ஒரு ஸ்லாப் இடிந்து விழுந்ததில் அங்குள்ள தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்து குறித்து புணே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளர்கள் பலியானதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT