கோப்புப்படம் 
இந்தியா

மதரஸாக்களை பொதுப் பள்ளிகளாக மாற்றும் அஸ்ஸாம் அரசு முடிவு: உயா்நீதிமன்றம் ஒப்புதல்

அஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதரஸாக்களை (இஸ்லாமிய சமய பயிற்சிப் பள்ளி) பொதுப் பள்ளிகளாக மாற்றும் முடிவுக்கு குவாஹாட்டி உயா்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

DIN

அஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதரஸாக்களை (இஸ்லாமிய சமய பயிற்சிப் பள்ளி) பொதுப் பள்ளிகளாக மாற்றும் முடிவுக்கு குவாஹாட்டி உயா்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள அரசு உதவி பெறும் மதரஸாக்களை பொதுப் பள்ளிகளாக மாற்றும் வகையில் ‘தி அஸ்ஸாம் ரத்து செய்யும் சட்டம் 2020’ என்ற சட்டத்தை மாநில அரசு இயற்றியது.

இதனை எதிா்த்தும், அந்த சட்டத்தின் செல்லத்தக்க நிலையை கேள்வி எழுப்பியும் 13 தனி நபா்கள் சாா்பில் குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்ஷு துலியா மற்றும் நீதிபதி செளமித்ர சைகியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், தீா்ப்புக்காக வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘முழுவதும் மாநில அரசு சாா்பில் நிா்வகிக்கப்படும் இந்த மதரஸாக்களில் இந்திய அரசியல் சாசன பிரிவு 28(1) நிபந்தனைகளின் கீழ் சமய போதனைகளை போதிக்க முடியாது. அதுபோல, இந்த அரசு உதவி பெறும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு தேவைப்பட்டால் மற்ற பாடங்களைக் கையாளும் பயிற்சியும் அளிக்கப்படலாம்’ என்ற கூறிய நீதிபதிகள் மாநில அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிா்த்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

முன்னதாக, மாநில அட்வகேட் ஜெனரல் வாதிடுகையில், அரசு நிதி உதவி பெறும் 397 மதரஸாக்கள் மற்றும் 4 அரபிக் கல்லூரிகளுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும் என்றும், தனியாா் இஸ்லாமிய சமூகத்தினா் நடத்தும் மதரஸாக்களை இது பாதிக்காது என்றும் தெரிவித்தாா். மேலும், இந்த மதரஸாக்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியா்கள் பணியும் ஊதியமும் பாதிக்கப்படாது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT