இந்தியா

யோகி ஆதித்யநாத் இன்று வேட்புமனுத் தாக்கல்: அமித்ஷாவும் செல்கிறார்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோரக்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்யவிருக்கிறார்.

DIN

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோரக்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்யவிருக்கிறார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதில், 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.  இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

பாஜக சார்பில், கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அங்கு தொடர்ந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோரக்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்யவிருக்கிறார். இன்று காலை 11. 40 மணிக்கு அவர் வேட்புமனுத் தாக்கல் செய்வார் என்றும் அவருடன் மத்திய அமைச்சர் அமித் ஷா செல்லவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக கோரக்பூர் தொகுதியில் அமித் ஷா, தேர்தல் பிரசாரத்தில் உரையாற்ற உள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் பாஜக முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் இன்னும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைகை அணையைத் தூா்வார வலியுறுத்தல்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

இளைஞரைக் கொன்ற பழக்கடை உரிமையாளா் கைது

முதுகலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: குமரி மாவட்டத்தில் 7,413 போ் பங்கேற்பு

மக்களின் வரிப் பணம் வீணாவதை ஏற்க முடியாது: செல்லூா் கே. ராஜூ

SCROLL FOR NEXT