இந்தியா

இந்தியாவை பிரதமர் ஆளவில்லை; மன்னர்தான் ஆள்கிறார்; ராகுல்

PTI


உதம்சிங் நகர்: இந்தியாவை பிரதமர் ஆளவில்லை, மாறாக, தற்போது ஒரு மன்னர்தான் ஆண்டுகொண்டிருக்கிறார். அவர், தான் எந்தவொரு முடிவெடுத்தாலும், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நம்பும் மன்னர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, கரோனா பேரிடர் காலத்தில் கூட, ஓராண்டுக்கும் மேலாக, விவசாயிகளை சாலையில் போராட வைத்தவர்தான் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், காங்கிரஸ் கட்சி அதுபோல ஒருபோதும் நடந்துகொள்ளாது.

காங்கிரஸ் கட்சி எப்போதுமே, விவசாயிகளுக்கோ, தொழிலாளர்களுக்கோ, ஏழைகளுக்கோ, தங்களது கதவுகளை மூடாது, மாறாக, அவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளும்.

நாட்டில் வாழும் அனைவருக்காகவும் பணியாற்றவில்லை என்றால், ஒருவர் பிரதமராகவே இருக்க முடியாது. அந்த வகையில், நரேந்திர மோடி, நாட்டின் பிரதமர் இல்லை. இன்றைய நாள்படி இந்தியாவை பிரதமர் ஆளவில்லை. அவர் ஒரு மன்னரைப் போல இருக்கிறார், அவர், மன்னர் எந்த ஒரு முடிவை எடுத்தாலும், அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று நம்பும் ராஜாவாக இருக்கிறார் என்று கூறினார்.

மேலும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உறுதியான பாறை போன்ற எதிர்ப்பைக் காட்டிய விவசாயிகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட ராகுல் காந்தி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT