ரூ. 30 ஆயிரத்திற்குக் கீழ் சந்தையில் கிடைக்கும் சிறந்த மடிக்கணினிகள் எவை?
அலுவலகத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ப ரூ. 30 ஆயிரத்துக்கு கீழ் சந்தையில் கிடைக்கும் சிறந்த மடிக்கணினிகள் குறித்த பட்டியல்...
பணியிடத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ப ரூ. 30 ஆயிரத்துக்கு கீழ் சந்தையில் கிடைக்கும் சிறந்த மடிக்கணினிகள் குறித்த பட்டியலைக் காணலாம்.
அலுவலகத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும், பயன்பாட்டில் நிலைத்தன்மை அம்சங்கள் கொண்ட மடிக்கணினிகள் சந்தையில் உள்ளன.
D II Model 5580
டெல் மாடல் 5580 மடிக்கணினி. இன்டல் கோர் ஐ7 ஏழாம் தலைமுறை புராசஸர் உடையது. 8GB உள்நினைவகம் (RAM) 256GB நினைவகமும் கொண்டது. 14 அங்குல திரை உடையது. 2GB கிராஃபிக்ஸ் அட்டை, விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டது. இதன் விலை ரூ. 26,995.
Acer SmartChoice Aspire 3
ஏசர் ஸ்மார்ட்சாய்ஸ் ஆஸ்பயர் மடிக்கணினி. இண்டல்கோர் N4500 புராசஸர் உடையது. 8GB உள்நினைவகமும் 256 நினைவகமும் கொண்டது. 15.6 அங்குல எச்.டி. திரையும் விண்டோஸ் 11 இயங்குதளமும் கொண்டது. இதன் விலை ரூ. 29,990.
HP 255 Notebook
எச்.பி. 225 நோட்புக் வகை மடிக்கணினி. இவை ஏஎம்டி அத்லான் சில்வர் 7120U புராசஸர் கொண்டிருக்கும். 8GB உள்நினைவகமும் 256GB நினைவகமும் உடையது. 15.6 அங்குல திரை உடையது. இந்தத் திரை எதிரொலிக்காது. இதனால் பயன்படுத்துவதற்கு சுமூகமானது. இதன் விலை ரூ. 29,890
HP Chromebook X360
கையடக்க விலையில் எச்.பி. நிறுவனத்தின் மற்றொரு மடிக்கணினியாக குரோம்புக் எக்ஸ் 360 உள்ளது. 4GB உள்நினைவகமும் 64GB நினைவகமும் உடையது. 14 அங்குல தொடுதிரை கொண்டது. இண்டல் யுஎச்டி கிராஃபிக்ஸ் அட்டை கொண்டிருக்கும். இதன் விலை ரூ. 29,990.
ASUS Chromebook CX1405
ஏசஸ் குரோம்புக் சிஎக்ஸ் 1405 மடிக்கணினி. இன்டல்கோர் 3-N355 புராசஸர் உடையது. 8GB உள்நினைவகம், 128GB நினைவகம் கொண்டது. 14 அங்குல முழு எச்.டி. திரை கொண்டது. குரோம் ஓஎஸ் இயங்குதளம் உடையது. இதன் விலை ரூ. 29,999.