வெள்ளி விலை ரூ. 7,000 சரிவு! தங்கம் விலையும் வீழ்ச்சி!!
சர்வதேச உலோகச் சந்தையில் தொடர்ந்து நிலவும் பலவீனம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததன் எதிரொலியாக, இன்றைய வர்த்தகத்தில், தங்கம், வெள்ளி விலை கடும் சரிவைச் சந்தித்தன.

புதுதில்லி: சர்வதேச உலோகச் சந்தையில் தொடர்ந்து நிலவும் பலவீனம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததன் எதிரொலியாக, இன்றைய வர்த்தகத்தில், தங்கம், வெள்ளி விலை கடும் சரிவைச் சந்தித்தன.
தில்லியில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.7,000 குறைந்து, கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு ரூ.1.50 லட்சமாக வீழ்ச்சியடைந்தது. அதேபோல், தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.1.26 லட்சமாகக் சரிந்தது.
அகில இந்திய சராஃபா சங்கத்தின் தகவலின் அடிப்படையில், உள்ளூர் சந்தையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.7,000 குறைந்து ரூ.1.50 லட்சமாக வீழ்ச்சியடைந்தது. இதற்கு முந்தைய வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளி ரூ.1.57 லட்சமாக விற்பனையானது. 99.9% தூய தங்கம், நேற்றை முன்தினம் (திங்கள்கிழமை) 10 கிராமுக்கு ரூ.1,26,800 ஆக இருந்த நிலையில் ரூ. 800 ஆக சரிந்து ரூ. 1,26,000 ஆக குறைந்தது.
Advertisement
Advertisement
அமெரிக்காவில், பணவியல் கொள்கை கடுமையாக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களில் தங்கள் முதலீட்டைக் குறைத்து வருவதால், இந்த சரிவு ஏற்பட்டது.
உலகளாவிய சந்தைகளில், ஸ்பாட் தங்கம் அவுன்ஸூ ஒன்றுக்கு 1 சதவீதம் சரிந்து 3,532.40 டாலராக வர்த்தகமானது. அதே நேரத்தில், வெள்ளி 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து அவுன்ஸு ஒன்றுக்கு 40.03 டாலராக சரிந்தது. இது செப்டம்பர் 2025-க்குப் பிறகு அதன் மிகக் குறைந்த அளவாகும்.