முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் தினசரி நோய்த்தொற்று 6,137 ஆக உயர்வு

பாகிஸ்தானில் தினசரி கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

பாகிஸ்தானில் தினசரி கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,137 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன், மொத்தம் 14,54,777 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 28 கரோனா நோயாளிகள் அந்த நோய்ப் பாதிப்பால் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1,649 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மக்கள் தொகை அதிகமுள்ள கராச்சியில் 54 சதவீதத்திற்கு மேல் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாட்டில் ஒட்டுமொத்தமாக 2,58,62,095 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 63,413 பரிசோதனைகள் செய்யப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →