முகப்பு
இந்தியா

காவி சால்வை அணிந்தபடி கல்லூரிக்கு சென்ற மாணவிகள்; கர்நாடகத்தில் தொடர் பரபரப்பு

சந்தை அருகே காவி உடை அணிந்தபடி கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

Updated On : 5 பிப்ரவரி, 2022 at 3:38 PM
கோப்புப்படம்
பகிர்:

கர்நாடகத்தில் பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்து மாணவர்களின் எதிர்ப்பினால் உடுப்பி அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து 6 மாணவிகளும் உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக, பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Advertisement

இந்த விவகாரம் உச்சப்பட்ச பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து மாணவிகள் காவி சால்வை அணிந்தபடி கல்லூரிக்கு பேரணியாக சென்றனர். உடுப்பி மாவட்டம் குந்தாப்பூரில் கல்லூரிக்கு செல்கையில் சீருடையின் மேல் மாணவ, மாணவிகள் காவி சால்வை அணிந்தபடி 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ஹிஜாப் அணிவது தேசிய அளவில் பேரும் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ், பாஜக கட்சிகள் பரஸ்பரம் விமரிசித்துவருகின்றனர். அதேபோல, சீருடையின் மேல் இஸ்லாமிய மாணவிகள் முகத்தை மறைக்கும் நோக்கில் ஹிஜாப் அணிந்து தனி வரிசையில் செல்வது போன்ற விடியோவும் வெளியாகியுள்ளது.

சந்தை அருகே காவி உடை அணிந்தபடி கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

ஷிவமோகா மாவட்டத்தின் பத்ராவதி நகரில் உள்ள அரசு கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள், தாங்கள் அணிந்து வந்த ஹிஜாபை கழற்றும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் கழட்ட மறுத்ததால் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து கல்லூரி முதல்வர், அந்த மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடகத்தில் பல கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தியிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.