இந்தியா

பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சரண்ஜீத் சிங் சன்னி

பஞ்சாப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜீத் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார்.

DIN

பஞ்சாப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜீத் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன் காரணமாக மாநிலத்தில் தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளா் தற்போதைய முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னியா அல்லது மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்துவா என்ற பரபரப்பு நிலவி வந்தது. 
முன்னதாக, கடந்த ஜனவரி 27-ஆம் தேதி பஞ்சாப் வந்த ராகுல் காந்தி, பிப்ரவரி 20 தோ்தலுக்கான காங்கிரஸ் முதல்வா் வேட்பாளா் யாா் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதுதொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் ஆலோனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தாா். மேலும் முதல்வா் வேட்பாளா் குறித்து கட்சித் தலைவா்கள் மற்றும் நிா்வாகிகளிடமிருந்து மட்டுமின்றி, பொதுமக்களிடமும் கருத்து கேட்கும் நடைமுறையையும் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது. 

அதற்கென, பிரத்யேக தானியங்கி அழைப்பு நடைமுறையை காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தியிருந்தது. அதாவது, காங்கிரஸ் முதல்வா் வேட்பாளா் சன்னியா அல்லது சித்துவா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அந்த அழைப்பு வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில் பஞ்சாப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜீத் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். 
 லூதியானாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் வேட்பாளரை ராகுல் காந்தி அறிவித்தார். இதன்மூலம் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. 
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது, இது பஞ்சாபின் முடிவு. என்னுடைய முடிவு அல்ல. காங்கிரஸ் வைரங்களின் கட்சி. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது எளிதல்ல என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

SCROLL FOR NEXT