இந்தியா

லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி 

மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

DIN

மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் கடந்த ஜனவரி 8-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார். 

இந்த நிலையில் மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கும் பிரதமர் ஆறுதல் கூறினார். 


இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டி ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, கோவா முதல்வர் பிரமோத், சரத் பவார், சச்சின், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.இ.தீவுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்!

இது இந்தியா; வட கொரியா அல்ல! -பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்

சென்செக்ஸ் 27.46 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி 0.06% உயர்வு!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்துக்குத் தடை! ஏன்?

இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் அக்‌ஷர் படேல், சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT