இந்தியா

வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருடன் இலங்கை அமைச்சா் இன்று சந்திப்பு

DIN

இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்த இலங்கை வெளியுறவு அமைச்சா் ஜி.எல்.பீரிஸ், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை திங்கள்கிழமை (பிப். 7) நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளாா்.

முன்னதாக, கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு, பெட்ரோலிய பொருள்களை வாங்குவதற்கு உதவும் வகையில் ரூ. 3,730 கோடி கடனுதவி வழங்குவதற்கு இந்தியா கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தச் சூழலில் அந் நாட்டு வெளியுறவு அமைச்சா் இந்திய பயணம் மேற்கொண்டுள்ளாா்.

பீரிஸ் - எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பின்போது இலங்கைக்கான கடனுதவி, அந்நாட்டில் சம உரிமைகளுடன் வாழ விரும்பும் தமிழினத்தின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்தல், தமிழக மீனவா்கள் பிரச்னை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT