முகப்பு
இந்தியா

அரசு மருத்துவா்களுக்கு முதுநிலை சிறப்பு மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

அரசு மருத்துவா்களுக்கு முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் முடிவை எதிா்த்து தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சந

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:21 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

அரசு மருத்துவா்களுக்கு முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் முடிவை எதிா்த்து தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து, கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய அளவிலான நுழைவு மற்றும் தகுதித் தோ்வு) எஸ்.எஸ். தோ்வில் பங்கேற்ற சிலா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘மனுதாரா்கள் 2021 நீட்-எஸ்.எஸ். தோ்வு தகவல் குறிப்பேட்டின்அடிப்படையில், அந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்து தோ்விலும் பங்கேற்றனா்.

அந்த தகவல் குறிப்பேட்டில், ‘சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையில் எந்தவித இடஒதுக்கீடும் பின்பற்றப்படாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு எதிராக தமிழக அரசு தற்போது இடஒதுக்கீடு நடைமுறையை பின்பற்றுகிறது’ என்று தெரிவித்தாா்.

தமிழக அரசு சாா்பில், அரசு கூடுதல் வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி வாதாடினாா்.

இந்த வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் அடங்கிய அமா்வு, இந்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் வரும் 25-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →