ம.பி.யில் கார் மரத்தில் மோதி விபத்து: 3 பேர் பலி
மத்தியப் பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தில் திங்கள்கிழமை கார் மரத்தில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தனர்.
இந்தியாம.பி.யில் கார் மரத்தில் மோதி விபத்து: 3 பேர் பலி
மத்தியப் பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தில் திங்கள்கிழமை கார் மரத்தில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தில் திங்கள்கிழமை கார் மரத்தில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தனர்.
இன்று காலை 6 மணியளவில் துக்பர் கிராமத்திற்கு அருகே திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஷாஹ்டோலில் இருந்து கட்னிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக சண்டியா காவல் நிலையப் பொறுப்பாளர் ராகவேந்திர திவாரி கூறினார்.
அதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மேலும் ஒருவர் இங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறந்தவர்களில் இருவர் கன்னு சேகர்(30) மற்றும் ஆஷிஷ் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.