இந்தியா

மகாராஷ்டிரத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 பேர் கைது

DIN

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 

பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் பகுதியில் உள்ள பெல்ஹரே கிராமத்தில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக வந்த தகவலையடுத்து, பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் நடத்திய சோதனையில் 1 கிலோ 724 கிராம் ஹெராயின் போதைப்பொருள், ரூ.2,60,000 ரொக்கம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். 

பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் மேலும் கூறியதாவது, 

குற்றம் சாட்டப்பட்ட அலீம் முகமது அக்தர்(46) மற்றும் சோட்டா முகமது நசீர் (40) ஆகிய இருவரும் உத்தரகண்ட் மாநிலத்தில் வசிப்பவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வரும் பிப்.15 வரை ஏடிஎஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் ராஜஸ்தானிலிருந்து மும்பைக்கு அவர்கள் அணிந்திருந்த காலணிகளில் வைத்து போதைப்பொருள் விநியோகம் செய்வதைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தனர். 

அங்கிருந்த 3 நடைபாதை வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. தலைமறைவான குற்றவாளிகளை ஏடிஎஸ் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT