முகப்பு
இந்தியா

குவெட்டாவில் குண்டுவெடிப்பு: 2 பாகிஸ்தான் துணை ராணுவ வீரர்கள் காயம்

பலுசிஸ்தானின் குவெட்டாவில் திங்கள்கிழமை குண்டு வெடித்ததில் பாகிஸ்தானின் எல்லைப்படை வீரர்கள் இருவர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Updated On : 7 பிப்ரவரி, 2022 at 5:17 PM
பகிர்:

பலுசிஸ்தானின் குவெட்டாவில் திங்கள்கிழமை குண்டு வெடித்ததில் பாகிஸ்தானின் எல்லைப்படை வீரர்கள் இருவர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குவெட்டாவின் சரியாப் சாலையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்கள பணியாளர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையோரத்தில் மோர்டர் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு, ரிமோட் மூலம் வெடிக்கச் செய்துள்ளனர் என்று எல்லைப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளனர். 

காயமடைந்த அதிகாரிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

Advertisement

பலுசிஸ்தானில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பல தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

கடந்த வாரம் மாகாணத்தின் நௌஷ்கி மற்றும் பஞ்ச்கூர் மாவட்டங்களில் இரண்டு பாதுகாப்புப் படைகளின் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 13 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு அதிகாரி உள்பட 7 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த மாதம், ஜாபராபாத் மாவட்டத்தில் உள்ள தேரா அல்லாயார் நகரில் கையெறி குண்டுகள் வீசியதில் இரண்டு போலீசார் உள்பட 17 பேர் காயமடைந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.