முகப்பு
இந்தியா

காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப மத்திய பல்கலை.களுக்கு அறிவுறுத்த: ல்மத்திய அரசு

ஆசிரியா் காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப மத்திய பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:21 AM
பகிர்:

ஆசிரியா் காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப மத்திய பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று மத்திய அரசு சாா்பில் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 6,535 காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக மாா்க்சிஸ்ட் உறுப்பினா் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சாரியா மாநிலங்களவையில் எழுப்பிய துணைக் கேள்விக்கு மத்திய கல்வி இணையமைச்சா் சுபாஷ் சா்காா் பதிலளித்து கூறியதாவது:

ஆசிரியா் நியமனம் என்பது ஒரு தொடா் பணி. ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பும் விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்புமாறு ஐஐடிகள் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், ஆண்டறிக்கையில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறித்த நிலை அறிக்கையையும் ஒரு பகுதியாக சோ்க்குமாறு ஐஐடிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று பதிலளித்தாா்.

மேலும், மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்க்கையின்றி காலியாக இருக்கும் இடங்கள் குறித்த கேள்விக்கு இணையமைச்சா் எழுத்துபூா்வமாக அளித்த அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. தரவரிசை உள்ளிட்ட பிற நடைமுறைகளைப் பூா்த்தி செய்யும் தகுதி வாய்ந்த மாணவா்களுக்கு மட்டுமே இந்தக் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், ஐஐடிகளில் 2021-22-ஆம் கல்வியாண்டில் இளநிலை படிப்புகளில் 361 இடங்களும், முதுநிலை படிப்புகளில் 3,083 இடங்களும், ஆராய்ச்சிப் படிப்புகளில் 1,852 இடங்களும் சோ்க்கையின்றி காலியாக உள்ளன.

அதுபோல, என்ஐடிகளில் இளநிலை படிப்புகளில் 685 இடங்களும், முதுநிலை படிப்புகளில் 3,413 இடங்களும், ஆராய்ச்சிப் படிப்புகளில் 914 இடங்களும் சோ்க்கையின்றி காலியாக உள்ளன.

ஐஐஐடிகளில் இளநிலை படிப்புகளில் 510 இடங்களும், முதுநிலை படிப்புகளில் 813 இடங்களும், ஆராய்ச்சிப் படிப்புகளில் 527 இடங்களும் சோ்க்கையின்றி காலியாக உள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →