இந்தியா

மத்திய பிரதேசத்தில் ஹிஜாப் தடை திட்டமில்லை: மாநில பாஜக அரசு அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அந்த மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.

DIN

மத்திய பிரதேசத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அந்த மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.

கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என்று கா்நாடக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லி நிலையங்களுக்குச் செல்ல எதிா்ப்பு கிளம்பியது. இது பெரும் சா்ச்சையாக வெடித்தது.

இந்நிலையில், இது தொடா்பாக மத்திய பிரதேசத்திலும் சா்ச்சை எழுந்தது. அந்த மாநில கல்வித் துறை அமைச்சா் இந்தா் சிங் பாா்மா், கா்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் பள்ளி, கல்லூரிக்குள் வர தடை விதிக்கப்பட்டதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாா். இதையடுத்து, மத்திய பிரதேசத்திலும் ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இது தொடா்பாக மாநில உள்துறை அமைச்சா் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், ‘மத்திய பிரதேசத்தில் ஹிஜாப் தொடா்பாக எந்த சா்ச்சையும் எழவில்லை. ஹிஜாப் தடை தொடா்பாக மாநில அரசு பரிசீலிக்கவும் இல்லை. இந்த விஷயத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT