இந்தியா

உ.பி. தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.24 சதவீத வாக்குகள் பதிவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

DIN

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு உத்தரப் பிரதேசத்தில் 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 சட்டமன்றத் தொகுதிகளில் 10,766 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகின்றது. 58 தொகுதிகளில் மொத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில்,

காலை 11 மணி நிலவரப்படி 20.03 சதவிகித வாக்குகளும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.03 சதவிகித வாக்குகளும், அதைத்தொடர்ந்து 3 மணி நிலவரப்படி 48.24 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக, ஆக்ரா 47.51 சதவீதம், அலிகார் 45.91 சதவீதம், பாக்பத் 50.13 சதவீதம், புலந்த்ஷாஹர் 50.84 சதவீதம், கௌதம் புத் நகர் 47.25 சதவீதம், காஜியாபாத் 43.10 சதவீதம், ஹாபூர் 51.63 சதவீதம், முஷபர்நகர் 791 சதவீதம், 8.91 சதவீதம் மற்றும் ஷாம்லி 53.13 சதவீதம் பேர் வாக்களித்தனர். 

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அமைதியை நிலைநாட்ட மாநில எல்லைகளை காவல்துறையினர் சீல் வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக உத்தரப் பிரதேச தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3,707 கோயில்களில் குடமுழுக்கு நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சாத்தனூா் அணையிலிருந்து 9000 கனஅடி நீா் திறப்பு! பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சாகித்திய அகாதெமி விருது படைப்புகளின் திறனாய்வு நூல் வெளியீடு!

அமெரிக்க ராணுவ வீரா்களுக்கு தடையின்றி ஊதியம்: பாதுகாப்புத் துறைக்கு டிரம்ப் உத்தரவு!

கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT