இந்தியா

ஐஏஎஸ் விதிமுறை திருத்தம்: மத்திய அரசின் நிலைபாடு குறித்து மக்களவையில் விளக்கம்

DIN

ஐஏஎஸ் விதிமுறைகளில் திருத்தம் செய்யும் முடிவில் மத்திய அரசின் தற்போதைய நிலைபாடு குறித்து மத்திய இணையமைச்சர் ஜித்தேந்தர் சிங் மக்களவையில் புதன்கிழமை விளக்கமளித்துள்ளார்.

மாநில அரசுகள் மத்திய பணிகளுக்கு போதிய ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பிவைக்க மறுப்பதால், மத்திய அரசு அமைச்சகங்களின் செயல்பாடு பாதிக்கப்படுவதாக மத்திய அரசு கருதுகிறது. ஆகையால் மாநிலத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய பணிக்கு மாற்றும் வகையில், ஐஏஎஸ் விதிமுறை 1954-இல் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் மத்திய பணியாளா், பயிற்சி அமைச்சகம் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

இந்த திருத்தத்திற்கு பாஜக ஆட்சியில் இல்லாத ஒடிஸா, மேற்கு வங்கம், கேரளம், தமிழகம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட 9 மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்திருந்தன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஜித்தேந்தர் சிங் எழுத்துப் பூர்வமாக கொடுத்த பதிலில்,

“மத்திய அமைச்சக பணிக்காக 40 சதவீத ஐஏஎஸ் அதிகாரிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஆனால், மத்திய அரசிற்கு தேவையான அதிகாரிகளை மாநில அரசுகள் அனுப்பி வைப்பதில்லை. இதனால், ஐஏஎஸ் விதிமுறை 1954-இல் திருத்தம் கொண்டுவருவது குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT