முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

உத்தரப் பிரதேசம் கேரளமாக மாறினால் என்னவாகும்? யோகிக்கு பினராயி விஜயன் பதிலடி

தேர்தல் பிரசார விடியோவில், இடதுசாரிகள் ஆட்சி செய்த/செய்துவரும் கேரளம் மற்றும் மேற்குவங்கத்தை விமரிசித்து வாக்கு செலுத்தும்படி வாக்காளர்களை உ.பி. முதல்வர் யோகி கேட்டுக் கொண்டார்.

இந்தியா

உத்தரப் பிரதேசம் கேரளமாக மாறினால் என்னவாகும்? யோகிக்கு பினராயி விஜயன் பதிலடி

தேர்தல் பிரசார விடியோவில், இடதுசாரிகள் ஆட்சி செய்த/செய்துவரும் கேரளம் மற்றும் மேற்குவங்கத்தை விமரிசித்து வாக்கு செலுத்தும்படி வாக்காளர்களை உ.பி. முதல்வர் யோகி கேட்டுக் கொண்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின் ஓர் அங்கமாக வெளியிடப்பட்ட விடியோவில், கேரளம் அல்லது மேற்குவங்கமாக உத்தரப் பிரதேசம் மாறிவிடும் என உ.பி. முதல்வர் யோகி பேசியிருந்தார்.

இதற்கு கேரள அரசியல் தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றிவருகின்றனர். 

அந்த வகையில் இதற்கு பதிலடி அளித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், "யோகி ஆதித்யநாத் பயப்படுவது போல் உ.பி., கேரளமாக மாறினால், அது சிறந்த கல்வி, சுகாதார சேவைகள், சமூக நலன், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அனுபவிக்கும். மதம் மற்றும் ஜாதியின் பெயரால் மக்கள் கொல்லப்படாத ஒரு நல்லிணக்கமான சமுதாயத்தை உருவாகும். அதைத்தான் உ.பி. மக்கள் விரும்புவார்கள்" என பதிவிட்டார்.

யோகியை விமரிசித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், "பாஜக ஆட்சிக்கு வராவிட்டால் உ.பி., காஷ்மீர், வங்காளம் அல்லது கேரளமாக மாறும் என வாக்காளர்களிடம் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உ.பி.க்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்!! காஷ்மீரின் அழகும், வங்காளத்தின் கலாசாரமும், கேரளத்தின் கல்வியும் அந்த இடத்திற்கு அதிசயங்களைச் செய்யும். உ.பி.யின் அற்புதமே அதன் பரிதாபமான அரசுதான்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →